எப்பொழுதும் சமநிலையுடன் இருக்க வேண்டும் -- இன்றைய சிந்தனை -- பிப்ரவரி 4, 2020
இன்றைய சிந்தனைக்கு உங்களை வரவேற்கின்றேன்!
உங்களுடைய அசலான திவ்ய உணர்வை திரும்ப பெற செய்யும் ஓர் பயணத்தில் நான் உங்களை அழைத்து செல்கிறேன், அந்த திவ்ய உணர்வானது நித்தியம், ஆனந்தம் மற்றும் முழு அறிவும் நிறைந்ததும் ஆகும். என்னுடன் இருங்கள், நீங்கள் உங்களின் வாழ்வு அனைத்திலும் உள்ள பெரியதோர் அனுபவத்தை பெற இருப்பீர்கள்..
சங்கர்ஷண் தாஸ் அதிகாரி sda.usr.tamil@gmail.com
பிப்ரவரி 4, 2020 - இஸ்கான் -ஆஸ்டின், டெக்ஸாஸ், அமெரிக்காவிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது. உலகமெங்குமுள்ள ஆயிரக்கணக்கான சந்தாதார்களின் சேவையில்
அர்ப்பணிப்பு
என் ஆன்மீக குருவான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர், ISKCON, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யருக்கு என் அன்பான அர்ப்பணிப்பு.
எப்பொழுதும் சமநிலையுடன் இருக்க வேண்டும்
தன்னுணர்வுப் பாதையில் நாம் அனைவரும் தேர்ச்சி பெறவேண்டிய மிக இன்றியமையாத பயிற்சிகளில் ஒன்று யாதெனில், எப்பொழுதும் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் சம நிலையில் இருக்கும் கலையே ஆகும். நாம் கௌரவிக்கப்பட்டாலோ அல்லது அவமதிக்கப்பட்டாலோ; தண்டிக்கப்பட்டாலோ, பாராட்டப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ; ஆரோக்ய நிலையில் இருந்தாலோ அல்லது நோயுற்ற நிலையிலிருந்தாலோ; இவையனைத்தையும் சமமாக, நாம் கிருஷ்ணரின் கருணையாகக் காண வேண்டும். பருவகாலம் கோடையானாலும் குளிரானாலும்; நாம் செல்வந்தர் எனினும், ஏழையெனினும்; இன்பம் அல்லது துன்பத்தை அனுபவிப்பவராயினும், இவையனைத்தையும் சமமாக நாம், மீண்டும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மீது கொண்டுள்ள எல்லையற்ற கருணையாகக் காண வேண்டும். இவ்வாறாக நாம் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வு எனும் எல்லையற்ற பேரானந்த பெருங்கடலினுள் மூழ்கி வரும் நிலையான மனம் கொண்ட சாதுக்களாக ஆவோம்.
கடவுள் இந்த கலியுகத்தில் எங்கே இருக்கிறார்? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இதனை குறித்து சாஸ்திரங்கள் ஏதேனும் கூறுகின்றனவா?
லூனா ஸ்டார்ஸ்
பதில் : அவர் தன் திருநாமமாக அவதரித்துள்ளார்
அன்புள்ள லூனா என் ஆசிகளை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
மிகவும் பௌதீக குணம் நிறைந்த இந்த கலியுகத்தில், யாரும், எல்லோரும், ஏன் ஒரு குழந்தையும் கூட எளிதாக அணுகக்கூடிய விதத்தில் கடவுள் அவதரித்துள்ளார். அவர் தன் திருநாமத்தின் ரூபத்தில் அவதரித்துள்ளார்.
இந்த நாமங்களை உளமார்ந்த அன்புடன் ஜபம் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையானது சந்தேகமின்றி மிக உன்னதமாக அமையும். நீங்கள் அவ்வாறு ஜபம் செய்தால், இந்த பௌதீகமயமான கலியுகத்தின் மாசு உங்களை பாதிக்காமல் பாய்ந்து விலகிவிடும். பௌதிகம் என்னும் நோயினால் முற்றிலும் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே இதிசோடஷகம் நாம்நாம் கலி-கல்மச-நாஷனம் நாத: பரதரோபாய: ஸர்வ-வேதேசு த்ருஷ்யதே
“வேத இலக்கியங்கள் அனைத்தையும் தேடிய பின்னர், ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபம் செய்வதை காட்டிலும், இந்த யுகத்திற்கு ஏற்ற ஒரு உன்னதமான சமய வழிமுறையைக் கண்டுபிடிக்க இயலாது.”
இத்தகவல் உங்களை அன்புடன் ஹரே கிருஷ்ண ஜபத்தை செய்யும் ஆனந்த நிலையில் வந்தடையும் என நம்புகிறேன். என்றும் உங்கள் நலன் விரும்பி,
சங்கர்ஷண் தாஸ் அதிகாரி
பக்தர்கள் பரவசத்துடன் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தல்
இப்பொது நீங்களும் நாங்கள் மேற்கொண்ட பணிக்கு உதவி செய்து, துயரப்படும் மனித சமூகத்தினருக்கு மிக உயர்ந்த சேவை செய்வதின் மூலம் கிருஷ்ணரின் மங்களகரமான ஆசிகளை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெற்றிடுங்கள். கீழ்கண்ட முகவரியை அழுத்தவும்:
Comments
Post a Comment